![Sunny Leone](http://image.nakkheeran.in/cdn/farfuture/VhEEg67_KdSn2-L5OPydM4V3MVs3RKPgVUEx8akXksw/1635236530/sites/default/files/inline-images/47_18.jpg)
நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் ஹாரர் காமெடி திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வீரா சக்தி மற்றும் கே. சசிகுமார் இணைந்து தயாரிக்க, ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, குறுகிய காலத்திலேயே இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளது. மும்பையில் நடைபெற்றுவந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை சன்னி லியோன் சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் யுவன் கூறுகையில், "OMG என்பது 'ஓ மை கோஸ்ட்' என்பதன் சுருக்கமே. இப்படம் முழுக்க, முழுக்க கமர்ஷியல், பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். இப்படம் வரலாற்றுப் பின்னணி கதைக்களத்தைக் கொண்டது. முதன்முறையாக வரலாற்றுப் பின்னணியில் ஹாரர் காமெடியை செய்துள்ளோம். சன்னி லியோன் பாத்திரம் படத்தின் முதன்மை பாத்திரமாகவும் ரசிகர்களைக் கவரக்கூடியதாகவும் இருக்கும்" என்றார்.