Published on 23/01/2025 | Edited on 23/01/2025
ஜெகன்நாத் தயாரிப்பில் கபீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ‘ஆஃபீஸ்’. இந்த சீரிஸில் குரு லக்ஷ்மண் மற்றும் சபரீஷ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்மேகா, கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவா ஆகியோருடன் அரவிந்த், பிராங்க்ஸ்டர் ராகுல் மற்றும் டி.எஸ்.ஆர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த ஆஃபீஸ் சீரிஸின் கதை, ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும், அன்றாட நிகழ்வுகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சீரிஸின் டைட்டில் டிராக்கான ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஃப்ளுட் நவீன் இசையமைத்திருக்க முகேஷ் பாடியுள்ளார். இந்த சீரிஸ் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.