Skip to main content

நேற்று விஜய் ரசிகர்களுக்கு அப்டேட், இன்று அஜித் ரசிகர்களுக்கு அப்டேட்...

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
 

ajith

 

 
இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில்  படத்திலிருந்து பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்து, வெளியிடப்பட்டது.

 
இப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படக்குழு நெறுங்கிய வட்டாரத்தில் பேசியபோது நமக்கு கிடைத்த தகவலின்படி படத்தை ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இறுதிக்கட்ட பணிகளை முடிக்க வேகமாக செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
 

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று மாலை படத்திலிருந்து இரண்டாவது பாடல் ஒன்று வெளியிட இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மாலை 6:45 மணிக்கு ஈடிஎம் பாடல் வெளியிடப்பட இருக்கிறது. அனைவரும் ஹெட்செட் பயன்படுத்தி பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்