
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதே நேரத்தில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவருடன் சாய் பல்லவி ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது நயன்தாரா மீண்டும் அவருடன் ஜோடி சேர இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து இயக்குனர் ராஜேஷ் பேசுகையில்...சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேசி வருகிறோம். அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் நயன்தாரா ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கிறோம். எனினும் எதுவும் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. சாய் பல்லவி நடிக்க இருப்பதாக வெளியான தகவல் வெறும் புரளி தான். சாய் பல்லவியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவேயில்லை" என்றார்.