![jgtfj](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wt_LFctnzyxmZrZeDYIksfu-8aBlscO50Q1FGAXv6AI/1590987990/sites/default/files/inline-images/maxresdefault-%281%29_7.jpg)
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நடராஜ் கரோனா குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...
''தனி மனிதன் திருந்தினால் தான் கரோனாவை வெல்ல முடியும். எதுக்கும் கூட்டம் வேணாம். தயவு செய்து இடைவெளியைப் பின்பற்றுங்கள். எது வாங்கினாலும் இடைவெளி அவசியம். அடுத்துக் கிடைக்காதது போல் கூடுவது தவறு'' எனப் பதிவிட்டுள்ளார்.