Skip to main content

ஆணும் ஆணும் காதலிக்கக் கூடாதா? தாலி கட்டுனா மட்டும்தான் லவ் தொடருமா? - அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பும் ரஞ்சித் 

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

Natchathiram Nagargiradhu trailer out now

 

பா.ரஞ்சித், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் காளிதாஸ் ஜெய்ராம் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனையொட்டி படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வலியுடனான எதார்த்த காதலையும், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலையும், ஆணவக்கொலைகளையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ட்ரைலரில் ஆணும் பெண்ணும் காதலிப்பது போல ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிக்க கூடாதா?, ஒரு நாட்டு பூனைக்காரி, காட்டு பூனைக்காரனை காதலிக்க கூடாதா ? தாலி கட்டுனா மட்டும் தான் நம்ம லவ் தொடரும்னா, அப்போ லவ்வுடைய மதிப்பு அவ்ளோதான்ல? என சமூக சார்ந்த பல கேள்விகளுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் ட்ரைலரின் இறுதியில் வரும் பெயர் பட்டியலில் எல்.ஜி.பி.டி யின் கொடிகளின் வண்ணத்தில் இடம் பெற்றுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்