Published on 24/12/2021 | Edited on 24/12/2021
மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களில் ஒருவரும் பல விருதுகளை வென்ற இயக்குநருமான கே.எஸ்.சேதுமாதவன்(90) காலமானார். தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'நாளை நமதே', கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'நம்மவர்', சிவகுமார் நடிப்பில் வெளியான 'மறுபக்கம்', 'தாகம்', 'கூட்டுக் குடும்பம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 'மறுபக்கம்' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது சேதுமாதவனுக்கு வழங்கப்பட்டது. இதுவரை சிறந்த இயக்குநர்களுக்கான நான்கு தேசிய விருது உட்பட மொத்தம் பத்து விருதுகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சேதுமாதவன் வயது மூப்பின் காரணமாக இன்று(24.12.2021) காலை காலமானார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.