Skip to main content

விஜய் சேதுபதி அமீர்கான் படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம்?

Published on 06/08/2022 | Edited on 06/08/2022

 

naga chaitanya said Why Vijay Sethupathi walks out Aamir Khan laal singh chaddha

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு  ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

ad

 

லால் சிங் படத்தில் அமீர் கானுடன் நடிக்க முதலில் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விஜய் சேதுபதி விளக்கினார். விஜய் சேதுபதியின் விலகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவென்று தெரியாமலேயே இருந்தது. 

 

இந்நிலையில் லால் சிங் சத்தா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணத்தை அப்படத்தில் நடித்த நாகசைதன்யா வெளியிட்டுள்ளார். லால் சிங் சத்தா படம் தொடர்பான அவர் அளித்த பேட்டியில், "இப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் நடிக்க வேண்டிய படம் நிறைய இருந்ததால் கால்ஷீட் பிரச்னை காரணமாக இப்படத்தில் இருந்து விலகினார். இதனை விஜய் சேதுபதி நேரடியாக சென்று படக்குழுவினரிடமே கூறி, அதன் பிறகு விலகி சென்றார். அதன் பிறகு தான் நான் இந்த படத்திற்குள் வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறன் பட அப்டேட்டை வெளியிடும் விஜய் சேதுபதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ட்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

vetrimaaran movie manushi trailer will released by vijay sehtupathi

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. விஜய் சேதுபதி ட்ரைலரை வெளியிடுகிறார். கோபி நயினாரும் வெற்றிமாறனும் ஒரு படத்தில் இணைந்துள்ளதாலும் ஆன்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாலும் இப்படத்தின் மீதான் எதிர்பார்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

Next Story

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Aamir Khan files case for fake video and said Never endorsed any political party

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார். 

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார்.