Published on 06/04/2022 | Edited on 06/04/2022
![Naga chaitanya nc22film directed by Venkat Prabhu](http://image.nakkheeran.in/cdn/farfuture/598jH4cNxVh1HZRRapx_vvxwCwQ8uIh5YQJV8fpMtzs/1649220943/sites/default/files/inline-images/104_14.jpg)
'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு ‘மன்மதலீலை’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்காலிகமாக 'என்.சி 22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். விரைவில் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.