Skip to main content

ஈஸ்வரன்... இசையமைப்பாளர் தமன் கொடுத்த அப்டேட்!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

simbu

 

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒரு மாத காலத்திற்கும் குறைவான நாட்களில் இப்படத்தை நடித்து முடித்துள்ளதால், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாக இப்படம் அமைந்துள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிம்புவின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

 

இந்த நிலையில், ஈஸ்வரன் படத்திற்கான இசை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது என அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் தனது சினிமா வாழ்க்கையில் குறைந்த காலகட்டத்தில் முடிக்கப்பட்ட இரண்டாவது படம் எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்