
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 1987ல் வெளிவந்த பேசும்படம் படத்திற்கு பிறகு நீண்டநாட்களாக மௌனப்படம் எதுவும் தமிழ் சினிமாவில் இல்லாத நிலையில் தற்போது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மவுனபடம் 'மெர்குரி'. பிரபுதேவா நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மெர்குரி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து இப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.