Skip to main content

மாயாண்டி குடும்பத்தார் - 2 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குநர்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Mayandi Kudumbathar 2 update

ராசு மதுரவனின் இயக்கத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் மாயாண்டி குடும்பத்தார். யுனைட்டெட் ஆர்ட்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு சபேஷ் முரளி காம்போ இசையமைத்திருந்தனர். குடும்ப உறவுகளை பற்றி பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைட்டெட் ஆர்ட்ஸ் நிறுவனமே இப்படத்தை தயாரிக்க கே.பி ஜகன்னாத் இயக்குகிறார். இவர் முதல் பாகத்தில் மாயாண்டி கதாபாத்திரத்தின் மகன்களின் ஒருவராக நடித்திருந்தார். மேலும் விஜய்யின் புதிய கீதை, நந்தா நடித்த கோடம்பாக்கம் உள்ளிட்ட சில படங்களை எடுத்துள்ளார். 

மேலும் மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்திலும் நடிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்