பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி நபேல் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கரோனா முதல் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன் பிறகு, பட வெளியீட்டிற்கு சரியான தேதியை எதிர்பார்த்திருந்த படக்குழு, இந்தாண்டு மே 13ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தது. கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த முறையும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளதால் 'மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் மோகன்லால் இன்று வெளியிட்டுள்ளார். முதல் இருமுறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், இந்த முறையாவது படம் வெளியாகுமா என்று ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
സ്നേഹത്തോടെ, നിറഞ്ഞ മനസ്സോടെ പ്രതീക്ഷിക്കുകയാണ്, ഈ വരുന്ന ഓഗസ്റ്റ് 12ന്, ഓണം റിലീസ് ആയി "മരക്കാർ അറബിക്കടലിന്റെ സിംഹം" നിങ്ങളുടെ മുന്നിലെത്തിക്കാൻ ഞങ്ങൾക്ക് കഴിയുമെന്ന്.. അതിനു നിങ്ങളുടെ പ്രാർഥനയും പിന്തുണയും ഉണ്ടാകുമെന്ന വിശ്വാസത്തോടെ ഞങ്ങൾ മുന്നോട്ട് നീങ്ങുന്നു.. pic.twitter.com/pPhADwoG0q
— Mohanlal (@Mohanlal) June 18, 2021