Published on 11/02/2018 | Edited on 11/02/2018
காற்று வெளியிடையை அடுத்து இயக்குனர் மணிரத்னம் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். "செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இதில் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இசை ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவனும், படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும் கவனிக்கிறார்கள். மேலும் பாடல்கள் கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். இதையடுத்து வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.