தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மஞ்சு மனோஜ், இவருடைய தந்தை மோகன்பாபுவும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நடிகராவார். சூப்பர் ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவர் மோகன்பாபு. மஞ்சு மனோஜ்ஜும் பிரணதி ரெட்டி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து, பின் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இந்த ஜோடி பிரிய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மஞ்சு மனோஜ் சமீப காலமாகவே மனைவி பிரணதியை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் தெலுங்கு வட்டாரங்களில் மஞ்சு மனோஜ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள். அவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மனைவி பிரணதியை விவாகரத்து செய்யப்போவதாக மஞ்சு மனோஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் தன்னுடைய திருமண பந்தத்தில் ஏற்பட்ட முடிவை பற்றியும் அதனால் அவருக்கு ஏற்பட்ட மனக் கஷ்டத்தை பற்றியும் உருக்கமாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னை இதுநாள் வரை ஆதரித்து வந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதுதான் விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
மஞ்சு மனோஜ்ஜும் சிம்புவும் மிக நெருக்கமான நண்பர்கள், மஞ்சு மனோஜ் நடிப்பில் தமிழில் வெளியான என்னை தெரியுமா படத்தில் தண்ணி கருத்துருச்சு என்னும் ரீமிக்ஸ் பாடலை சிம்புதான் பாடினார். அதேபோல சிம்புவின் இது நம்ம ஆளு படத்தை தெலுங்கில் வெளியிட்டபோது அந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு மஞ்சு மனோஜ் மட்டுமே தெலுங்கு திரைப்பட உலகின் சார்பில் வந்திருப்பார்.