Skip to main content

''நாம் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க, அவர்கள் தினமும் வெளியே வருகிறார்கள்'' - மகேஷ் பாபு 

Published on 18/04/2020 | Edited on 18/04/2020


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தளப் பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் கரோனோவிலுருந்து மக்களைக் காப்பாற்ற அயராது பாடுபட்டுவரும் காவல்துறை அதிகாரிகளையும், தூய்மைப் பணியாளர்களையும் திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டிவரும் வரும் நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ஓய்வின்றித் தொடர்ந்து பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

 

 

 

 

geg

 

"நம் தெருவில் உள்ள சுற்றுப்புறங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறதா என்று உறுதி செய்யும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் இந்தப் பதிவு. நாம் நம் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க, அவர்கள் தினமும் வெளியே வந்து நாம் தீங்கு விளைவிக்கும் வைரசிலுருந்து விலகி இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்தக் கொடிய வைரஸுக்கு எதிரான இந்த நிலையான போர், முன்வரிசைப் பணியாளர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று. உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, மகத்தான மரியாதை, முடிவற்ற அன்பு மற்றும் ஆசீர்வாதங்களும்'' எனப் பாராட்டியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்