![sfgsd](http://image.nakkheeran.in/cdn/farfuture/PvlB-XuqRWhZ-Wco2MaQvJSzUnA2A5uxy_uG7ZK8HGU/1599542010/sites/default/files/inline-images/maxresdefault_133.jpg)
தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் தனுஷின் உத்தமபுத்திரன் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 73 வயதான இவர் மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் மகேஷ் பாபு ஜெயபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"ஜெயபிரகாஷ் ரெட்டி காரு காலமான செய்தியால் வருத்தம் அடைந்தேன். தெலுங்கு திரையுலகின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். அவருடன் பணிபுரிந்த அனுபவத்தை எப்போதும் மதிப்பேன். அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் என் மனமார்ந்த இரங்கல்" என கூறியுள்ளார்.