![mahaan second song update out now](http://image.nakkheeran.in/cdn/farfuture/cEDE8Ri9Uh0QrnyQgIFEC9oTbQiNAu2vo-m0BwJ9W5g/1643355012/sites/default/files/inline-images/evanda.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மகான் படத்தின் இரண்டாவது பாடலான "எவன்டா எனக்கு கஸ்ட்டடி..." பாடல் இன்று (28.1.2022) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மகான் படம் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.