![Dhruv Vikram](http://image.nakkheeran.in/cdn/farfuture/dkTPDmXUFHytgDVuW-GGW_6lHyyKFkuV9RHE0VPemo8/1631338908/sites/default/files/inline-images/35_17.jpg)
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மகான்'. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் த்ருவ் விக்ரமும் நடிக்கிறார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
கடந்த மாதம் 20ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று (10.09.2021) த்ருவ் விக்ரமின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையிலான போஸ்டரும் போஸ்டர் ரீல் காணொளியும் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் கவனம்பெற்ற இந்தப் போஸ்டர் ரீல், யூ-டியூப் தளத்தில் ஒரு மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது.