மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியாபடநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' தெலுங்கில் 'சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே ராஜராஜா. இந்நிலையில் இப்படம் குறித்து ஏ.ஆர்.கே ராஜராஜா பேசும்போது....
"இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது. முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் 'செல்வந்தன்' படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த 'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது" என்றார்.