Skip to main content

“என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல” - நடிகர் மாதவன் உருக்கம்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

madhavan thanks rajinikanth

 

இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றது வருகிறது. மேலும் திரை பிரபலங்கள் பலரும் படத்தை  பார்த்து பாராட்டி வருகின்றனர். 

 

அந்தவகையில் படத்தை பார்த்த ரஜினிகாந்த், "ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும், குறிப்பாக இளைஞர்கள் பார்க்க வேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணனின் வரலாற்றை தத்ரூபமாக நடித்து படமாக்கி இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தன்னையும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்கு அவருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்" என அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

இந்நிலையில் இதற்கு நடிகர் மாதவன் வீடியோ வடிவில் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், "என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடிய நம் படக்குழுவுக்கு தான் சேரும். ரஜினி சார் ரொம்ப நன்றி" என்று உருக்கமாக பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்