லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பென்ஸ்’. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது.
இதையடுத்து இப்படம் எல்.சி.யு. கதையில் உருவாகுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். பின்பு ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் ராகவா லாரன்ஸின் லுக் இடம்பெற்றிருந்தது.மேலும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே இப்படத்தின் கதாநாயாகிக்காக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. பின்பு இப்படத்தில் ‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசக் கூட’ ஆகிய ஆல்பம் பாடல் மூலம் கவனம் ஈர்த்த சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் மாதவன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மாதவன் தற்போது தமிழில் டெஸ்ட், அதிர்ஷ்டசாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தியிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.