கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான படம் 'சார்லி'. இந்தப் படத்தில் துல்கருடன் பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் செம ஹிட்டான சார்லி படம், தமிழர்கள் மத்தியிலும் மிகப் பிரபலம்.
இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருந்தனர். பிரமோத் பிலிம்ஸ் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி, தமிழில் தயாரித்தது. மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வருகிறது.
லாக்டவுனுக்கு முன்பாகவே இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகும் என்று சொல்லப்பட்டது. பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய திலீப் குமார்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மாறா' என்ற டைட்டிலில் உருவாகும் சார்லி தமிழ் ரீமேக் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது. இறுதிக்கட்ட பணிகளும், இசை மட்டுமே மீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கவிஞர் தாமரை பாடல்களை எழுத உள்ளார் .
இந்நிலையில் இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகிறது.