Skip to main content

மைக் டைசனுடன் சண்டையிடத் தயாராகும் விஜய் தேவரகொண்டா!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

liger movie shooting update released

 

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

 

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான, இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள  நிலையில் மைக் டைசன் மற்றும் விஜய் தேவரகொண்டா சண்டை  காட்சிகளை படமாக்க படக்குழு தற்போது அமெரிக்கா சென்றுள்ளது.  இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும்  அமெரிக்காவில் உள்ள ஹோட்டலில் இருக்கும் புகைப்படத்தை பூரி ஜெகன்நாத்தின் மனைவி சார்மி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்