
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங், மற்றும் சாய் பல்லவி நடிக்கிறார்கள். இப்படம் தீபாவளி அன்று வெளியாகயுள்ளது. இந்நிலையில் சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இப்படத்தில் சூர்யா ஜோடியாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து இயக்குனர் கே.வி.ஆனந்த் இது குறித்து விளக்கமளித்து பேசுகையில்..."படத்தில் நடிப்பதற்காக ப்ரியா வாரியரை நாங்கள் அணுகவில்லை. மற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறோம். எந்த நடிகையுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் மட்டுமே துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் என்.ஜி.கே படத்தை சூர்யா முடித்த பிறகே மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறோம்." என்றார்.