Skip to main content

"இந்த உலகமே மேக்ஸ்லதான் இயங்குது" - கவனம் ஈர்க்கும் பா. ரஞ்சித் படத்தின் ட்ரைலர் 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

kuthiraivaal movie trailer released

 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பா. ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து, தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, 'ரைட்டர்' போன்ற படங்களை தயாரித்து வெற்றி கண்டார். இதனைத் தொடர்ந்து தற்போது கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் நடித்துள்ள 'குதிரைவால்' படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன்  - ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். இப்படம் வரும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

'குதிரைவால்' படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. உளவியல், ஆழ் மன கற்பனைகள், மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்