![lingusamy](http://image.nakkheeran.in/cdn/farfuture/3XZOn2pGNeNeWCXaB9ApLKL30Tywwv2cjBio9NZ1F-c/1615016461/sites/default/files/inline-images/EvtBpZDUUAAz0Mf.jpg)
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/F1ws2ioHaIqRtCFNU-EKH9ZbYHaXe8WJWXZopEMXOwY/1615016551/sites/default/files/inline-images/article-inside_34.png)
லிங்குசாமி அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனான நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'ரபொ19' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இத்தகவலை, தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்கிரீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.