Skip to main content

'கழுகு 2' படத்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவின் புதிய அவதாரம் 

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
krishna

 

 

 

'தீதும் நன்றும்' படத்தை தொடர்ந்து என்.ஹெச்.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் ஹெச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் இரண்டாவது படம் 'திரு.குரல்'. அறிமுக இயக்குனர் பிரபு இயக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கின்ற நிலையில் படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணா நடிக்க, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்க ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய,  வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - தியாகராஜன், ஸ்டண்ட் - ஹரி, நடனம் - ஸ்ரீ க்ரிஷ். படத்தை  விநியோகஸ்தர் சிங்காரவேலன் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்