![krishna](http://image.nakkheeran.in/cdn/farfuture/rBTku9eX5gTpezguDzx0NP6eF_Rns-2sixtV0noRqR4/1548935530/sites/default/files/inline-images/krishna.jpg)
திறமையான நடிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் தன்மை கொண்டது மலையாள சினிமா. வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் அனைவருக்கும் சவாலாகவும் பிரமிப்பாகவும் இருப்பதால் அதன் மீது தனி கவனம் செலுத்துகின்றனர். வளர்ந்துவரும் கலைஞர்களையும், திறமையான நடிகர்களையும் இணைத்துக்கொள்ளும் மலையாள சினிமாவிற்கு அடுத்த வரவாக, தன் இளமை துள்ளும் நடிப்பால், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கும் நடிகர் கிருஷ்னா இணையவுள்ளார். தனது அடுத்த படமாக மலையாளத்தில் 'பிக்காசோ' என்ற படத்தின் மூலம் கேரளத்தில் கால் பதிக்கவுள்ளார். இதை உற்சாகத்துடன் பகிர்ந்த நடிகர் கிருஷ்ணா மிகவும் உத்வேகத்துடன் இயக்குனர் சுனில் கரியாட்டுகரா உடன் இணைய உள்ளார். இவர் இதற்கு முன்பாக "பக்கிடா" மற்றும் "சக்கோ ரண்டமான்" போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் ஷேக் அஃசல் 'பிக்காசோ' படத்தை தயாரிக்கிறார்.