Skip to main content

பழம்பெரும் நடிகை கே.பி.ஏ.சி லலிதா காலமானார்

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

K.P.A.C Lalitha passed away

 

கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகை கே.பி.ஏ.சி லலிதா (74) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நாடக கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய இவர் கடந்த 1969 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான 'கூட்டுக்குடும்பம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை, அஜித் நடிப்பில் வெளியான பரமசிவம், கிரீடம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். பல்வேறு விருதுகளை வென்ற நடிகை கே.பி.ஏ.சி லலிதா இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், நான்கு முறை கேரள அரசின் விருதையும் வென்றுள்ளார். 

 

இந்நிலையில் நடிகை கே.பி.ஏ.சி லலிதா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரின் மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை கே.பி.ஏ.சி லலிதா மறைந்த மலையாள இயக்குநர் பரதனின் மனைவி ஆவார். இயக்குநர் பரதன் தமிழில் 'தேவர் மகன்' 'ஆவாரம்பூ' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்