Skip to main content

"ஜாலி... ஜாலி... ஜாலிதான்" - கிருத்திகா உதயநிதி கலகலப்பு பேச்சு

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

kiruthiga udhayanidhi talk about Paper Rocket

 

ஜி 5 ஓடிடி தளம் அமீர் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்', வசந்தபாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம்', ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எய்ட்', பிரகாஷ் நடிப்பில் 'ஆனந்தம்', ராதிகா சரத்குமார் நடிப்பில் 'கார்மேகம்', கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'பேப்பர் ராக்கெட்' உள்ளிட்ட 10 இணைய தொடர்களை (வெப் சீரிஸ்) வெளியிடவுள்ளது. இந்த தொடர்களை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், அமீர் வெற்றிமாறன், வசந்தபாலன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர். 

 

இவ்விழாவில் பேப்பர் ராக்கெட் என்ற தொடரை அறிமுகம் செய்த பின் பேசிய கிருத்திகா உதயநிதி, "பேப்பர் ராக்கெட்டில் 7 பாடல்கள் உள்ளது. ஆனால் இதை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு தெரியாது இந்தனை பாடல் இருக்கும்னு. உண்மையாகவே இந்த மாதிரி படக்குழு கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். அவங்க சொன்ன மாதிரி ஜாலியா போனோம், ஜாலியா ஷூட் பண்ணோம், ஜாலியா முடிச்சிட்டோம்.  அந்தவகையில் இந்த தொடரில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி" எனக் கூறியுள்ளார்.

 

கிருத்திகா உதயநிதி இயக்கும் 'பேப்பர் ராக்கெட்' தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிகழ்வில் இத்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்   காலை மாலை என்ற முதல் பாடலும் வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீயாய் பரவிய தகவல் - முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
yuvan about his instagram account de activate issue

தமிழில் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்போது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை, வடிவேலு - ஃபகத் ஃபாசில் நடிக்கும் மாரிசன், சூரி - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகும் கருடன் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து தனது படங்களின் அப்டேட் மற்றும் அவரது சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடிரென ஆக்டிவாக இல்லை. அவரது பக்கம் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா எனப் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சமீபத்தில் வெளியான விஜய் பட பாடல் கலவையான விமர்சனம் பெற்றதாகச் சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உலா வந்த தகவலுக்கு தற்போது யுவன் ஷங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இது ஒரு தொழில்நுட்ப கோளாறு, அதை சரி செய்ய என்னுடைய டீம் முயற்சி செய்து வருகிறது. விரைவில் வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.