தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் எனப் பட்டியல் எடுத்தால் அதில் என்றுமே விஜயகுமாருக்கு முக்கிய இடம் உண்டு. நாட்டாமை கதாபாத்திரம் என்றாலே நமக்கு விஜயகுமார் ஞாபகத்திற்கு வந்துவிடுவார். பல படங்களில் நாயகன், நாயகியின் அப்பாவாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகுமார்.
எல்லோரும் தன் மகன்களை மட்டுமே கதாநாயகனாக களம் இறக்குவார்கள். ஆனால், இவரது மகன் மட்டுமல்லாது மகள்கள் அனைவரையுமே சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க வைத்தவர். இப்படியான பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான விஜயகுமார் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.
நேற்று திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “அப்பா வீட்டில் நலமுடன் தான் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்
To all my friends, family and fans.. Appa is hale and HEALTHY at home.
— ArunVijay (@arunvijayno1) December 22, 2022
Kindly do not believe any rumors!
Thank you for all your concern and love! ❤️ pic.twitter.com/oKm4a306lG