Skip to main content

“டிசம்பர் வரை திரையரங்குகளை திறக்க மாட்டோம்” -கேரளா திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
theatre

 

 

கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டு இருக்கிறது. 

 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தளர்வுகள் குறித்தான அறிக்கையில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், 50% பார்வையாளர்களை கொண்டே செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் வரை கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

 

அந்த அறிக்கையில், “கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் வரை தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை. ஜி.எஸ்.டி., முனிசிபல் வரி, போன்ற வரி விதிப்புகளுடன் 50 சதவீத பார்வையாளர்களை கொண்டு தியேட்டர்களை லாபகரமாக இயக்க முடியாது.

 

மேலும் தற்போதைய சூழலில் பார்வையாளர் யாருக்காவது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தியேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்படும். வரி விதிப்புகளை அரசு நீக்கினால் மட்டுமே சினிமா தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்