Skip to main content

'அதைப் பற்றி எனக்கு ஐடியா இல்லை..!' - கீர்த்தி சுரேஷ் விளக்கம் !

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


நடிகையர் திலகம் படம் மூலம் தேசிய விருது பெற்று இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடை குறைப்பதற்காகச் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.இவர் தற்போது தமிழில் பென்குயின், ரஜினியின் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகத் சமீபத்தில் தகவல் வெளியானது.

 

fvxbfx

 

கீர்த்தி சுரேஷின் அப்பாவான சுரேஷ்குமார் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாகவும், பாஜகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் கீர்த்திக்கு திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.அதில்...''இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது.இது எப்படித் தான் துவங்கியது என்று தெரியவில்லை.தற்போதைக்குத் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எனக்கு இல்லை'' எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்