சிம்பு தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். இப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் சிம்புவின் 48வது படமாக இப்படம் உருவாகுவதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்பு கமல் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை.
இதையடுத்து ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து பார்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதே போல் அவரது இயக்கத்தில் அவரே ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் பல மாதங்களாக உலா வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் எந்த படம் அடுத்து தொடங்கும் அவரது 50வது படம் எதுவாக அமையும் என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிம்புவின் அடுத்த மூணு பட அப்டேட் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த படம் அடுத்து தொடங்கும் எது அவரது 50வது படமாக இருக்கும் என்ற தெளிவான அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ராகன்’ படத்தில் ‘ஏண்டி விட்டு போன’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். அப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
pic.twitter.com/yhFQhsBbWo— Silambarasan TR (@SilambarasanTR_) January 27, 2025