Skip to main content

'பிக் பாஸிஸ் இருந்து வெளியேறிய கையோடு'... சிறையில் இருந்த அம்மாவை மீட்ட கவின்?

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பல பெண்களை காதலித்து புதிய காதல் மன்னனாக வலம் வந்த  கவின் பிக் பாஸ் வீட்டுக்குள் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி அதில் அவரே பலிகடா ஆவது வழக்கம். இருந்தும் மனம் தளராமல் 80 நாட்களுக்கும் மேல் இருந்து வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் கொடுத்த 5 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேற சம்மதித்து அதன்படி வெளியேறினார். இதனிடையே கவினின் தயார் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் அவர் நீதிமன்றத்தால் சிவ வாரங்களுக்கு முன் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
 

cgj


இந்த வழக்கில் கவினின் தாய் ராஜலட்சுமி, பாட்டி  ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை திருப்பி தரவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், தன்னுடைய தாய் கைதான விவகாரம் கவினுக்கு தெரியாத நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்த அவர், தாய் கைதாகி சிறையில் இருக்கும் செய்தியை அறிந்துள்ளார். தற்போது அவரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் கவின் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தை கொடுப்பதாகக் கவின் கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்