Skip to main content

கரோனா விழிப்புணர்வுக்காக  நடன போட்டியை அறிவித்த படக்குழு!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
vgsdgv

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை வரும் மே 3-ஆம் தேதி வரை நீட்டித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், கட்டில் திரைப்படக்குழு சிறுவர்களுக்கான கரோனா விழிப்புணர்வு நடன போட்டியை நடத்தவுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு : ரூ.25,000, இரண்டாம் பரிசு : ரூ.15,000, மூன்றாம் பரிசு : ரூ.10,000 என அறிவித்துள்ளனர்.


கரோனா பீதியால் வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் “கட்டில்” திரைப்படக் குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கரோனா கானா பாடலுக்கு சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு இந்தப்பரிசு வழங்கப்படுகிறது. உலகமெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். அதைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கட்டில் திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்