![katteri](http://image.nakkheeran.in/cdn/farfuture/r24I25Rp8tvPuTnMiTYJQU4Npb_fDXftpbYBsO1pi9g/1608270318/sites/default/files/inline-images/61_17.jpg)
'யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களின் இயக்குனரான டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன் உட்பட பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்தநிலையில், கரோனா நெருக்கடி காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால், படத்தைத் திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. பின்னர் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளிலும் இறுதி முடிவு எட்டப்படாததையடுத்து, படத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்தது.
சில தினங்களுக்கு முன்னரே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானநிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திகில் மற்றும் விறுவிறுப்பு காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.