ஸ்ரீரெட்டிக்கு பிறகு சினிமாவில் தற்போது மீடூ மூவ்மெண்ட் மூலம் பல்வேறு பிரபலங்கள் பாலியல் புகார்கள் கூறி வரும் நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் 'நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்து 1 லட்சம் தரேன் என்றார். 1 மணிநேரம் என்னால் முடியாது என்று சொன்னேன்' என பதிவிட்டிருந்தார். இதற்கு கஸ்தூரி அவருக்கு பதிலடிகொடுக்கும் விதமாக... 'அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ. ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பேரு அலையறானுவளோ' என பதிவிட்டிருந்தார்.
இது திரையுலகில் மீண்டும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில் அந்த ரஜினி ரசிகர் மீண்டும்....'எல்லோரும் பேசி முடிச்சிட்டிங்களா?இப்ப நான் பேசவா.நான் பதிவு பண்ணியது உண்மை அல்ல. இதுல நான் சொல்ல வந்தது சோசியல் மீடியாவில் வருவதை நம்பி அதுக்கு ஒரு கருத்து சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதிக்க...ஒரு விழிப்புணர்வுக்கு உங்க name use பண்ணிட்டேன் @KasthuriShankar மேடம் sorry..' என பதிவிட்டார். இதற்கு நடிகை கஸ்தூரி 'its ok, all is forgotten, don't worry be happy. இதனால் அறியப்படுவது என்னவெனில், கஸ்தூரி கிட்டே வாலாட்டினா பத்து வருஷம் பொறுக்கமாட்டேன், அப்பவே நறுக்கிடுவேன் என்பதே! peace' என பதில் பதிவு போட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்கள் இருவரும் இப்படி மீடூ வை பயன்படுத்தி சமூகவலைத்தளத்தில் விளையாடியது ரசிகர்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.