வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சங்கத் தலைவன். இந்த படத்தை வெற்றிமாறன் தனது க்ராஸ்ரூட் கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார். எழுத்தாளர் பாரதிநாதன் எழுத்தில் உருவான தறியுடன் நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.
மேலும் பிரபல தொகுப்பாளர் ரம்யா முதன்முறையாக ஹீரோயினாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பல வருடங்கள் கழித்து கருணாஸ் நடித்திருக்கிறார். அறம் படத்தில் நடித்து பிரபலமடைந்த சுனுலட்சுமி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் சமுத்திரக்கனி, வெற்றிமாறன், ரம்யா, கருணாஸ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் கருணாஸ், “இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்” என்றார்.
மேலும் பேசியவர், “யாரோ கொடுத்த குரல் என்னோட குரல்னு சொல்றாங்க. வாட்ஸ் ஆப்பில் வருவதெல்லாம் உண்மைன்னு நினைச்சிக்கிறாங்க. இது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. சட்டமன்றத்தில் என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க. அதனால மறுபடியும் நடிக்கவே வந்துவிட்டேன் என்ற அவர், தயாரிப்பாளர் தேனப்பனும் நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் இரவில் ஒன்றாக இருப்போம், அதனை மெரினாவே அறியும். அதேபோல எனக்கு தெரிந்தவர்களில் மனதிற்குள் ஒன்று, வெளியே ஒன்று என்று நடிக்காமல் உண்மையாக நட்பாக இருப்பவர் வெற்றிமாறன்” என்றார்.