Skip to main content

"ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி கவனக்குறைவாக இருக்காதீர்கள்" - கார்த்திக் சுப்புராஜ்  

Published on 17/05/2021 | Edited on 17/05/2021
bfbfbfb

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. 

 

இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி, நிதிஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது.  இந்நிலையில் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதில்...

 

"நிலைமை மிகவும் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கிறது. இதனால் பல இழப்புகள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். ஆரம்பகால கண்டறிதல் முக்கியமானது! ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி கவனக்குறைவாக இருக்க வேண்டாம். சங்கிலியை உடைப்போம். முக கவசம் அணியுங்கள். வீட்டில் தனித்திருங்கள். பாதுகாப்பாக இருங்கள். தடுப்பூசி போடுங்கள். ஒன்றாக நாம் மிக விரைவில் வெல்வோம்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
karthick subburaj directing suriyas 44th film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சூர்யாவின் 44ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சூர்யாவின் 2டி நிறுவனமும் கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸாக இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளார்கள். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ், கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது . ஆனால் தற்போது சூர்யாவுடன் திடேரென்று கைகோர்த்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் ஓடிடி அப்டேட்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

jigarthanda double x ott update

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து சீமான், ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். இந்த வெற்றியை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.