Skip to main content

பேட்ட, விஸ்வாசம் 10 நாட்கள் வசூலை முறியடித்த காஞ்சனா-3...

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். தற்போது இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்குகிறார். 
 

kanchana-3


காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது தற்போது அது உண்மையாகியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகவும் பகிர்ந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
 

இந்நிலையில், காஞ்சனா-3 படம் வெளியாகி 10 நாட்களில் 130 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

devarattam


முன்னதாக பொங்கல் பண்டிகையில் வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் படஞ்களின்போதும் 10 நாட்களில் 100 கோடி வசூல் செய்துவிட்டது என்று அறிவித்து இரு படக்குழுக்களும் வசூல் குறித்து போட்டிப்போட்டுக்கொண்டன. இதிலிருந்து இந்த படமும் 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூல் என்று அறிவித்துள்ளது. இனி வரும் படங்களின் 10ஆம் நாள் வெற்றிகரமாக ஓடுகிறது என்று அறிவிப்பதற்கு பதிலாக வசூல் இவ்வளவு என அறிவிப்பது ஒரு ட்ரெண்டாகியுள்ளது. அந்த இரு படங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் ராகவா லாரன்ஸின் இந்த படம் வாரிகுவித்துள்ள வசூல் மிகப்பெரியது, அதுவும் பத்து நாட்களில்.

 

 

சார்ந்த செய்திகள்