மகாகவி பாராதியாரின் 142வது பிறந்தநாள் இன்று (11.12.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவரை நினைவு கூர்ந்து, சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின், அவரது எக்ஸ் பக்கத்தில், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே! எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்! வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும், “சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன…— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2023