Published on 13/11/2018 | Edited on 13/11/2018
காஜல் அகர்வால் நடித்த 'கவச்சம்' தெலுங்கு படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இந்த விழாவில் கலந்துகொண்ட புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு காஜல் அகர்வால் குறித்து பேசியபோது, காஜல் அகர்வாலை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த விழாவில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதை சற்றும் எதிர்பாராத காஜல் அகர்வாலும் இரண்டு விநாடிகள் அதிர்ச்சியடைந்தார். மேலும் இது காஜல் அகர்வாலுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் இது உண்மையில், ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் முத்தமிட்ட ஒரு மோசமான தருணம், அதுவும் ஒரு பெரிய நிகழ்ச்சியில் என ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு #BanChotaKNaiduFromTFI என்ற ஹேஸ்டேகை உருவாக்கி சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.