Skip to main content

“அணுகினால் அரசு உதவி செய்யும்”- தர்பார் நஷ்டம் குறித்துஅமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி ரஜினி நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் தர்பார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க மேலும் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திஅ லைகா நிறுவனம் தயாரித்தது.
 

kadambur raju

 

 

இந்த படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முதல் ஒரு வாரம் நன்றாக ஓடிய படம், போக போக கூட்டம் குறைந்து வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி ரஜினியைச் சந்திக்க நிநியோகஸ்தர்கள் முயற்சி செய்தனர். ஆனால், அது நடக்கவில்லை. பின்னர், ரஜினியே அழைப்பார் என்று பொறுமையாக காத்துள்ளனர் விநியோகஸ்தர்கள். அப்போதும் ரஜினி தரப்பிலிருந்து அழைப்பு வரவில்லை என்பதால் இன்று போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டுக்குச் சென்றனர். ஆனால், விநியோகஸ்தர்களை உள்ளே விடாமல் போலீஸ்காரர்கள் தடுத்துள்ளனர். 

இந்நிலையில், திரைத்துறை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தார். அப்போது தர்பார் நஷ்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “நஷ்டம் தொடர்பாக இதுவரை யாரும் எங்களிடம் வரவில்லை. சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு லைகா நிறுவனம் சார்பில் வந்தனர். அவர்கள் கேட்டபடி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் யாரும் அணுகவில்லை.

நான் ஊடகங்களில் பார்த்துதான் இந்தச் செய்தியை அறிந்து கொண்டேன். அதேசமயம், தர்பார் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதையும் ஊடகங்களில் பார்த்தேன். தயாரிப்பாளர்கள் சங்கம் என ஒன்று இருக்கிறது. அது சரியாகச் செயல்படாததால், அதற்கு தனி நிர்வாகி நியமிக்கப்பட்டிருக்கிறார். முறைப்படி விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குச் சென்றால், அவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம். அங்கு சென்று தீர்வு காணக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்தும், அவர்களுக்கு உதவும்” எனப் பதில் அளித்துள்ளார் கடம்பூர் ராஜு.

 

சார்ந்த செய்திகள்