![kadambur raju](http://image.nakkheeran.in/cdn/farfuture/E0kyF4mlevTs1ld_-8TU7vNjFofA_tAyxqIsJa_V96s/1596448610/sites/default/files/inline-images/kadambur-raju_8.jpg)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் சினிமா ஷூட்டிங்கும் மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது.
மீண்டும் எப்போது ஷூட்டிங் தொடங்கப்படும் என்பது கேள்விகுறியாகவே உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இதுகுறித்து பேசியுள்ளார்.
கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “திரைப்பட படப்பிடிப்பு அனுமதி கோரி திரைப்படத் துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது. 60 பேர் இருந்தாலே போதும்.
ஆனால் திரைப்பட ஷூட்டிங் வெளிப்புறங்களில் நடைபெறும். அந்த பகுதியில் பார்வையாளர்கள் கூட்டம் கூடும். அது தவிர திரைப்பட படபிடிப்பு நடத்த பல்வேறு அனுமதி வாங்கவேண்டியுள்ளது. அதனால் இப்போது அனுமதிக்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.
திரையரங்கு திறப்பு குறித்து மத்திய அரசு இதுவரை முடிவு சொல்லவில்லை. எனவே இந்த மாதம் திரையரங்கு திறக்க திறக்கவாய்ப்பில்லை” என்றார்.