பிக் பாஸ் போட்டியாளர்களில் பங்கேற்று வரும் சாண்டி, பிக்பாஸ் 2 போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்த சாண்டிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

here is your answer! confirmed by Kaajal herself!! they never had kids..#BiggBossTamil3 #Sandy pic.twitter.com/UcyGq7bX9y
— johnny ⎊ bravo (@CheckOutJohnny1) September 15, 2019
இந்நிலையில் காஜல் பசுபதிக்கும் சாண்டிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதை அவர் மறைத்து விட்டதாகவும் சமூகவலைதளவாசிகள் சர்ச்சையைக் கிளப்பி விட்டனர்.இதற்கு பதிலளித்திருக்கும் காஜல், 'எனக்கு சாண்டியுடன் திருமணமாகி பின் விவாகரத்தானது. ஆனால் குழந்தைகள் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மை கிடையாது. அந்தக் குழந்தைகள் என்னுடைய உறவினரது குழந்தைகள்' என்று கூறியுள்ளார்.