Published on 05/04/2018 | Edited on 06/04/2018

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் அடுத்தாக செக்க சிவந்த வானம் படத்தை இயக்கி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி அரசியல் வாதியாகவும், சிம்பு என்ஜினீயராகவும், விஜய்சேதுபதி இன்ஸ்பெக்டராகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். இதேபோல் தற்போது ஜோதிகா இதில் ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருடைய இந்த புதிய கதாபாத்திரம் பேசப்படும் என்று கூறப்படுகிறது. ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.