உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் மரணமடைந்து வருகின்றனர். இது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது கரோனா அறிகுறிகள் இருந்தும் எந்த ஒரு மருத்துவரையும் பார்க்காமல் ஒரு ஹாலிவுட் பிரபலம் குணமடைந்துள்ளது ஹாலிவுட்டில் மிகுந்து நம்பிக்கையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே.ரௌலிங் என்பவர் தான் கரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டாலும் குயின்ஸ் மருத்துவமனை மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றியதால் முற்றிலுமாக கரோனாவிலுருந்து விடுபட்டுள்ளதாகச் சமூக வலைத்தளத்தில் டாக்டர் பேசும் விடியோவோடு பதிவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது...''கரோனா அறிகுறிகளில் இருந்து விடுபடுவது எப்படி என்று குயின்ஸ் மருத்துவமனையிலிருந்து பேசும் இந்த மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.கடந்த இரண்டு வாரங்களாக கோவிட் 19 வைரஸின் அனைத்து அறிகுறிகளும் எனக்கு இருந்தன.நான் எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை.இந்த மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றினேன். தற்போது முற்றிலுமாக குணமடைந்துள்ளேன்.இவர் சொன்ன முறை மிகவும் உதவியது.எந்த பக்க விளைவுகளும் இல்லாத இந்த முறையை உங்கள் அன்புக்குரியவர்களிடம் சொல்லுங்கள்.அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.