1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பையை வென்றதை மையமாக வைத்து ‘83’ என்ற புதிய படம் தயாராகி வருகிறது. இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கபீர்கான் இயக்கும் இப்படத்தின் முன்னனி வேலைகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்துலண்டனில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் நடக்க உள்ளது. இந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு தற்போது கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கபில்தேவ் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. மேலும் மும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதில் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.